திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (12:53 IST)

கவனத்தை ஈர்த்த அதுல்யா ரவியின் புகைப்படங்கள்!

நடிகை அதுல்யா ரவி வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய "ஏமாளி" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதையடுத்து வெளிவந்த காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பின்னர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய "கேப்மாரி" படத்திலும் நடித்திருந்தார். இப்போது ஒரு சில படங்களில் அவர் நடித்து வந்தாலும், மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை.

ஆனாலும் தன்னை தூக்கிவிட்ட சமூகவலைதளங்கள் மூலமாக எப்போதும் ரசிகர்களோடு தொடர்பில் இருந்தே வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளனர்.