1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2017 (10:39 IST)

விவேகம் பட கருத்து ; அஜித் ரசிகர்களோடு மோதிய கஸ்தூரி

விவேகம் படம் குறித்து நடிகை கஸ்தூரி தெரிவித்த கருத்து, அஜித் ரசிகர்களுக்கும், அவருக்குமிடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நடிகர் அஜித் நடித்து சமீபத்தில் வெளியான விவேகம் படம் பலரிடமிருந்தும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அப்படி விமர்சிக்கும் நபர்களுடன் அஜீத் ரசிகர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.


 

 
இந்நிலையில், டிவிட்டரில் எப்போது வெளிப்படையாக கருத்து தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரியிடம் ஒரு நபர் விவேகம் படம் பார்த்தீர்களா எனக் கேட்க? பார்த்தேன் முதல் நாள் முதல் ஷோ என கஸ்தூரி பதிலளித்தார்.


 

 
படம் எப்படி? என அந்த நபர் அடுத்த கேள்வி கேட்க, ‘ வேண்டாம்.. என் வாய கிளராதீங்க. நானே கம்முனு இருக்கேன்’ என கஸ்தூரி கூற, தொடங்கிய பிரச்சனை. அஜீத் ரசிகர்கள் அவருடன் மல்லுகட்ட, பதிலுக்கு இவர் கோபப்பட டிவிட்டரே ரணகளமாகியது.