இளம் இயக்குனர் கூறிய கதையை கேட்டு அசந்து போன விஜய்....
ஒரு காதல் கதையை கூறி நடிகர் விஜயை ஒரு இளம் இயக்குனர் அசத்தியுள்ளார்.
துருவங்கள் பதினாறு படத்தின் கேரள வினியோகஸ்தராக இருந்தவர் மஹாவிஷ்னு என்ற இளைஞர். இவர் சமீபத்தில் நடிகர் விஜயிடம் ஒரு காதல் கதையை கூறியிருக்கிறார். படத்தின் இடைவேளை காட்சியை கேட்டு அதைக் கேட்டு அசந்து போன விஜய், அவரை வெகுவாக பாராட்டினாராம். இதையடுத்து, ஒரு பெரிய ஹீரோவிடம் கதை சொல்லி ஓகே செய்திருக்கிறார் மஹாவிஷ்னு.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மஹாவிஷ்னு “விஜய்யிடம் நான் உருவாக்கிய கதையை கூறினேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அது காதல், காமெடி மற்றும் ஏராளமான சஸ்பென்ஸ் உள்ள கதையாகும். இளைஞர்களுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும்.
ஒரு பெரிய ஹீரோவிடம் இப்படத்தின் கதையை கூறியிருக்கிறேன். அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அப்படத்திற்கான படப்பிடிப்பு இடங்களை நான் சென்னை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் தேடி வருகிறேன். படத்தின் தயாரிப்பு வேலைகள் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. மற்ற தகவல்கள் பற்றி விரைவில் தெரிவிக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.