நடிகர் விஜய் போலீஸில் புகார் ...
தனது வீட்டில் வாடகைக்கு இருந்துவரும் 2 பேரை வெளியேற்றக்கோரி நடிகர் விஜய் போலீஸில் புகாரளித்துள்ளார்.
இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் தனது மகன் விஜய் பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிய விஜய் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது. இதற்கு அவரது மனையும் விஜய்யின் அம்மா ஷோபாவுக்கு விரும்பமின்றி அக்கட்சியிலிருந்து விலகி விஜய்க்கு ஆதவளித்தார்.
அதை தொடர்ந்து விஜய்யின் எதிர்ப்பால் அந்த கட்சியை கலைத்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
இந்நிலையில், விஜய் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் 2 பேரை வெளியேற்றக்கோரி புகாரளித்துள்ளார். ரவிதேஜா மற்று ஏ.சி.குமார் இருவரும் சமீபத்தில் விஜய்க்கு எதிராகச் செயல்பட்டதற்காக நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் பொறுபில் இருந்தபோது சென்னை சாலிகிராமத்தில் உள்ளா தனது வீட்டில் தங்கவைத்திருந்தார்.
பின்னர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து 2 பேரும் வீட்டைக் காலி செய்ய மறுத்த நிலையில் போலிஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.