AK 61 படத்தில் நடிப்பதை உறுதி செய்த நடிகர்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.
மேலும் ராஜதந்திரம் வீரா மற்றும் சார்பட்டா புகழ் ஜான் கொக்கன் ஆகியோரும் நடிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகிவந்தன. இந்நிலையில் நடிகர் வீரா தற்போது அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் “இந்த மனிதருடன் சில நாட்கள் செலவழித்தேன், அவர் இருக்கும் இடத்தை அடைய, அழகான தோற்றம் மற்றும் ஒரு பண்புள்ள மனிதராக இருப்பதை விட இன்னும் நிறைய தேவை என்பதை உணர்ந்தேன். ஒரு மனிதன் ஒரு நிகழ்வாக மாறுவதற்கு பல ஆண்டுகள் இரத்தம், வியர்வை, மரியாதை, கடின உழைப்பு, உந்துதல், ஒருமைப்பாடு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை தேவை . அன்புள்ள AK , எப்போதாவது நம் பாதைகள் மீண்டும் கடக்கவில்லை என்றால், நீங்கள் என் வாழ்க்கையில் மிகவும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்பதையும், நாம் ஒன்றாகக் கழித்த நாட்களில் நீங்கள் வாழ்ந்து என்னை வாழ அனுமதித்தீர்கள் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.” என்று கூறி படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.