1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (08:58 IST)

பண்ணாரி அம்மன் கோவிலில் வைகை புயல்! – ஜாலியாக செல்பி எடுத்த மக்கள்!

Vadivelu
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு பண்ணாரி அம்மன் கோவில் சென்ற நிலையில் அங்குள்ள மக்களோடு செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் வைகை புயல் வடிவேலு. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது “நாய்சேகர் ரிட்டன்ஸ்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதை தொடர்ந்து “மாமன்னன்” உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் மைசூரில் படப்பிடிப்பில் இருந்த வடிவேலு சத்தியமங்கலம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

வடிவேலு வருவதை கண்டதும் ஆச்சர்யமடைந்த மக்கள் அவரை சூழ்ந்து கொண்டுள்ளனர். கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த வடிவேலு, ரசிகர்களின் செல்பிகளுக்கு பொறுமையாக போஸ் கொடுத்திருந்துவிட்டு அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டுள்ளார்.