வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 5 அக்டோபர் 2024 (10:56 IST)

சட்டம் என் கையில் படத்துக்கு காட்சிகள் அதிகரிப்பு… நடிகர் சதீஷ் வேண்டுகோள்!

காமெடி நடிகர்கள் தற்போது ஹீரோவாக மாறி வருகின்றனர். சந்தானம், வடிவேலு, சூரி உள்ளிட்ட பல காமெடி நடிகர்கள் ஹீரோவாகவும் ஜெயித்து வரும் நிலையில் நடிகர் சதீஷும் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் அவர் ஹீரோவாக சமீபத்தில் ரிலீஸான படம் ’சட்டம் என் கையில்’. செப்டம்பர் 20ஆம் தேதி ரிலீஸாகி பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து குறைவான திரைகளில் மட்டும் ரிலீஸான இந்த படம் இப்போது இரண்டாவது வாரத்தில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி வீடியோ வெளியிட்டுள்ள சதீஷ் “சட்டம் என் கையில் படத்துக்குக் கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை படம் பார்க்காதவர்கள் சென்று பாருங்கள். படம் பார்த்து பிடித்தவர்கள் மீண்டும் பாருங்கள். ஒரு நல்ல படம் கொடுத்துள்ளோம் என்ற திருப்தியோடு உள்ளோம். இனிமேல் உங்கள் கையில்” எனக் கூறியுள்ளார்.