திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: சனி, 8 ஜூன் 2024 (10:29 IST)

நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன் நடித்த 'ஹரா' திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது..

நீண்ட இடைவேளைக்குப் பிறகு,மைக் மோகன் என அழைக்கப்பட்ட வெள்ளி விழா நாயகன் மோகன்   மீண்டும் நாயகனாக நடித்துள்ள படம்  'ஹரா'. கோவையை சேர்ந்த மோகன் ராஜ்,ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார்.
 
ஆக்‌ஷன் ,த்ரில்லராக உருவாகி உள்ள இந்த  படத்தில் யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் நடத்துள்ளனர்.
 
இந்நிலையில் ஹரா திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியான நிலையில், கோவை நூறடி சாலையில் உள்ள கற்பகம் சினமாஸ் அரங்கில் ஹரா படம் வெளியானது.
 
காலை முதலே பொதுமக்கள் ஆர்வமாக திரையரங்கிற்கு வந்த நிலையில்,கோவை நண்பர்கள் குழுவினர் ஹரா படத்தை அனைவரும் இணைந்து கண்டு ரசித்தனர்.
 
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் நடிகர்  மோகனை கண்டது மகிழ்ச்சியாக இருந்த்தாகவும்,
மேலும் ஹரா படம் நல்ல ஆக்‌ஷன் படமாக அப்பா மகளின் பாசத்தை வெளிப்படுத்தும் படமாக இருப்பதாக தெரிவித்தனர்.
 
படத்துக்கு ரஷாந்த் அர்வின் இசையமைத்து, ஒளிப்பதிவுவை பிரகத் முனியசாமி மேற்கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.