செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (15:07 IST)

திருமணத்திற்கு முன்பு அது நல்லது - நடிகர் ஓபன் டாக்

திருமணத்திற்கு முன்பு உறவு பற்றி நடிகர் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
‘வக்கிடோனார்’ படம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் ஆயூஷ்மான் குரானா. இவர் பல படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் “பெற்றோர்கள் சம்மதத்தோடு நடக்கும் திருமணத்தையே நாம் பெரிதும் ஆதரிக்கிறோம். திருமணம் என்பது எல்லோரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானது. ஆழம் பார்த்துதான் தண்ணீரில் குதிக்க வேண்டும். அதுபோல், திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்வது நல்லது என்பது என் கருத்து. ஏனெனில், திருமணத்திற்கு அது பிரச்சனைகளை ஏற்படுத்தினால், அது பல விளைவுகளை ஏற்படுத்தும்.
 
பாலிவுட் நடிககைகள் ஒருபக்கம் பரபரப்பான கருத்துகளையும், பிகினி உடை அணிந்த புகைப்படங்களை வெளியிடுவதன் மூலமும் சர்ச்சைகளை கிளப்பி வரும் நிலையில், இவரின் இந்த கருத்து பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.