சந்தானம் படத்தை விற்றுக்கொடுத்த ஆர்யா… அதுவும் இவ்வளவு தொகைக்கா?
சந்தானம் நடித்த சபாபதி படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலர்ஸ் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.
கடந்த சில வருடங்களாக கதாநாயகனாக மட்டுமே நடித்து வரும் சந்தானம் வருடத்துக்கு குறைந்தது நான்கு படங்களாவது ரிலிஸ் செய்து வந்தார். ஆனால் சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த ஏ 1 தவிர மற்ற படங்கள் எதுவும் வெற்றி பெறாததால் அவர் படங்கள் இப்போது ரிலீஸாகாமல் உள்ளன.
சர்வர் சுந்தரம், சபாபதி, டிக்கிலோனா, கொரோனா குமார் ஆகிய படங்கள் ரிலிஸூக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் இப்போது அவரின் சபாபதி படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. இயக்குநர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ள இந்த படத்தில் சந்தானத்துடன், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை நடிகர் ஆர்யா தனது நெருங்கிய நட்பு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்காக 4 கோடி ரூபாய்க்கு விற்றுக்கொடுத்துள்ளாராம். இதனால் படக்குழு ஆர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.