வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (17:45 IST)

நடிகர் ஆரியின் தாயார் மரணம்

நெடுஞ்சாலை படத்தின் நாயகன் ஆரியின் தாயார் திடீர் மரணம் அடைந்துள்ளார்.

 
பிரபல நடிகர் ஆரியின் சொந்த ஊர் பழனி. அவரது பெற்றோர் அங்குதான் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஆரியின் தாயார்  முத்துலட்சுமி இன்று அதிகாலை 3 மணியளவில் புதுக்கோட்டையில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான பழனிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு, அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வு நாளை காலை பழனியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
ஆரியின் தாயார் மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.