வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2019 (16:07 IST)

விஸ்வாசத்தை மறந்திடாத அஜித்! மீண்டும் சிவா கூட்டணி?

மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் 5 வது முறையாக இணையவுள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.
 

 
பலகோடி ரசிகர்களுக்கு சொந்தக்காரராகவும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் திகழும் நடிகர் அஜித் தற்போது "நேர்கொண்ட பார்வை" படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்ததையடுத்து  போனிகபூர் தயாரிக்கும் இன்னொரு படத்திலும், அஜித் நடிக்க உள்ளார்.
 
அதன்பிறகு, அஜித்தின் செண்டிமெண்ட் கம்போவான  சிறுத்தை சிவா இயக்கத்தில் 5 வது முறையாக மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. விவேகம் படம் மட்டும் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றது.  
 
இப்படங்களின் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் 5 வது முறையாக அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்த படமும் "வி" யில் ஆரம்பித்து "ம்" முடியுமா? என ரசிகர்கள் சிலர் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.