1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 8 பிப்ரவரி 2025 (09:56 IST)

மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்கும் அப்பாஸ்… வெளியான தகவல்!

இயக்குனர் கதிர் இயக்கிய, காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமான அப்பாஸ், உடனடியாக சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் மாறினார். அதையடுத்து அவருக்கு பல படங்கள் புக் ஆகின. ஆனால் அவர் விஜய் அஜித் போல ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடிக்காமல் விட்டார்.

இதனால் சில படங்கள் மட்டுமே ஹிட் ஆக பல படங்கள் பிளாப் ஆகின. இதனால் ஒரு கட்டத்தில் வில்லன் கதாபாத்திரங்கள் வர ஆரம்பித்து கடைசியில் வாய்ப்பே இல்லாமல் போனது. இதனால் அதிருப்தியான அப்பாஸ் சில விளம்பர படங்களில் தலைகாட்டி விட்டு காணாமல் போனார்.

கடந்த 10 ஆண்டுகளாக நியுசிலாந்தில் செட்டில் ஆகி வாழ்ந்து வந்த அப்பாஸ், தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்க உள்ளதார். இயக்குனர் புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் களவாணி புகழ் சற்குணம் இயக்கத்தில் உருவாகும் புதிய வெப் தொடரில் அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த தொடரில் துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.