திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: சனி, 18 நவம்பர் 2017 (09:33 IST)

விவசாயியாக நடிக்கும் விஜய்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க இருக்கும் விஜய், விவசாயியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 
‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யை இயக்கப் போகிறார்  ஏ.ஆர்.முருகதாஸ். அவரின் வழக்கமான படங்களைப் போலவே சமூக அக்கறை கொண்டதாக இந்தப் படமும் இருக்கப் போகிறது. கூடவே விஜய்யும் இணைந்திருப்பதால், எந்த மாதிரியான விஷயத்தைக் கையாளப் போகிறார்கள் என்ற கேள்வி  எழுந்துள்ளது.
 
தற்போது கிடைத்துள்ள தகவல்படி, விவசாயிகள் பிரச்னையைக் கையில் எடுக்கப் போகிறார்களாம். ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான திட்டங்கள் குறித்து இதில் பேசப் போகிறார்களாம். ‘கத்தி’ படத்தைப் போலவே இதிலும்  இரண்டு வேடங்களில் நடிக்கிறார் விஜய். அதில், மாற்றுத்திறனாளி வேடமும் ஒன்று என்கிறார்கள்.