வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2024 (09:30 IST)

இந்திய சினிமாவின் மூத்த இயக்குனர் ஷியாம் பெனகல் காலமானார்..!

வங்காளத்தின் முக்கியமான இயக்குனர் ஷியாம் பெனகல். இந்தியாவின் சிறந்த 25 இயக்குனர்களின் பட்டியலை தயா‌ரித்தால் இவரும் இருப்பார். இந்திய சினிமாவில் சத்யஜித் ரே, ரித்விக் கட்டக் மற்றும் மிருனாள் சென் ஆகிய கலைப்பட இயக்குனர்களின் வரிசையில் அடுத்த தலைமுறை இயக்குனராக உருவானவர் ஷ்யாம் பெனகல். இவர் இயக்கிய 7 படங்கள் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளன. பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் இவரின் படங்கள் போட்டியிட்டுப் பரிசுகளை வென்றுள்ளன.

அவர் இயக்கிய ஆங்கூர், நிஷாந்த், மன்த்தன் உள்ளிட்ட ஏராளமான படங்கள் உலகளவில் கவனம் பெற்றுள்ளன. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்திய சமூகத்தில் நடந்த மாற்றங்களைத் தன்னுடைய கதையில் கொண்டுவந்தவர் ஷ்யாம் பெனகல்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளதாகவும் வீட்டில் வைத்தே டயாலிசீஸ் நடத்துவதாகவும் சொல்லப்பட்டது. அதையடுத்து தற்போது அவர் சிகிச்சைப் பலனின்றி காலமாகியுள்ளார். அவருக்கு வயது 90. இதையடுத்து மாற்று சினிமா ஆர்வலர்களும் திரையுலகினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.