செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 ஜூலை 2024 (11:38 IST)

ஷூட்டிங்கில் ஏற்பட்ட அசம்பாவிதம்.. கார் சேஸிங்கில் விபத்தில் சிக்கிய மலையாள நடிகர்! - போலீஸ் வழக்குப்பதிவு!

Arjun asokan

கேரளாவில் மலையாள பட ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மலையாளத்தில் நிவின் பாலி, நயன்தாரா நடித்து ‘லவ் ஆக்‌ஷன் ட்ராமா’ படத்திய இயக்கிவர் அர்ஜுன் டி ஜோஸ். இவர் தற்போது ப்ரொமான்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ‘ப்ரேமலு’ புகழ் மேத்யூ தாமஸும், அங்கமாலி டைரீஸ் படத்தில் நடித்த அர்ஜூன் அசோகனும் நடித்து வருகின்றனர்.

 

இந்த படத்தின் கார் சேஸிங் காட்சி கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் கொச்சியில் நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக உணவு டெலிவரி செய்பவர் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் டெலிவரி ஊழியர் இரண்டு கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் கார் கவிழ்ந்ததால் அர்ஜூன் அசோகனும், சங்கீத் ப்ரதாப் என்ற நடிகரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளாமல் இருந்ததற்காக படக்குழுவின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் மலையால சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K