ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியில் பிரபலமான நடிகையான ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை கடந்த 2007ம் ஆண்டி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகளும் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலக்கட்டத்தில் ஆராத்யா உடல்நிலை குறித்து வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் சில யூட்யூப் சேனல்களில் ஆராத்யா பச்சன் இறந்துவிட்டதாக வீடியோ வெளியிட்டதுடன், அவர் இறந்து கிடப்பது போன்ற மார்பிங் வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனக்கு எந்த உடல்நல குறைவும் இல்லாமல் நன்றாக இருப்பதாக ஆராத்யா பச்சன் தெரிவித்தார், மேலும் இதுகுறித்து நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்த நிலையில், ஆராத்யா உடல்நிலை குறித்து சமூகவலைதளங்கள், இணையதளங்களில் வெளியான கருத்துகளை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனாலும் இன்னும் பல தளங்களில் அந்த தகவல் நீக்கப்படாமல் இருப்பதாக ஆராத்யா தரப்பில் மீண்டும் ஒரு மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வீடியோவை பதிவேற்றம் செய்தவர்கள் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதை சுட்டிக்காட்டி அவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை கூற அவகாசம் அளித்து விசாரணயை மார்ச் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
Edit by Prasanth,K