1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 1 மார்ச் 2025 (08:52 IST)

எனது ராஜாவுக்காக.. –குட் பேட் அக்லி டீசர் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன்!

சமீபத்தில் ரிலீஸன அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அது மட்டுமில்லாமல் அஜித் ரசிகர்களுக்கே அந்த படம் பிடிக்கவில்லை. அதனால் அவரின் அடுத்த ரிலீஸான ‘குட் பேட் அக்லி’ மேல் ரசிகர்கள் அளவற்ற நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் டீசர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த டீசர் பற்றி பேசியுள்ள இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் “மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம். வாய்ப்பிற்கு மிகவும் நன்றி சார். இது எனது சாருக்காக… எனது ராஜாவுக்காக..  என் இதயத்தில் இருந்து உங்களை நேசிக்கிறேன் சார்.” என தெரிவித்துள்ளார்,