திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 9 பிப்ரவரி 2019 (11:13 IST)

செல்ஃபி எடுக்க வந்த வாலிபர்; நயன்தாராவின் செயலால் ஆடிப்போன இளைஞர்

செல்பி எடுத்தாலே செல்லை உடைக்கும் இந்த காலக்கட்டத்தில் நயன்தாரா செல்பி எடுக்க வந்த இளைஞரிடம் மூஞ்சை காமிக்காமல் அமைதியாக போட்டோ எடுத்துக்கொண்டார்.
 
சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் செல்பி மோகம் அதிகரித்துவிட்டது. எங்கு போனாலும் செல்பி யாரை பார்த்தாலும் செல்பி. குறிப்பாக செலிபிரிட்டிக்கள் பொது இடத்திற்கு வந்தால் போதும், அவர்களை சூழ்ந்துகொண்டு செல்பி கேட்டு நச்சரிப்பது.
 
அப்படி செல்பி எடுக்க முயன்ற வாலிபர்கள் 2 பேரின் செல்போனை நடிகர் சிவகுமார் வேகமாக தட்டிவிட்டு உடைத்தார். 
 
இந்நிலையில் விமான நிலையத்தில் நடந்து வந்து கொண்டிருந்த நயன்தாராவுடன் அங்கிருந்த வாலிபர் ஒருவர் செல்பி எடுக்க முற்பட்டார், ஆனால் நயன்தாரா கோபப்படாமல் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். செல்தட்டி சிவகுமார் எங்கே நயன்தாரா எங்கே என ஒப்பிட்டு ரசிகர்கள் நயன்தாராவை பாராட்டி வருகின்றனர்.