1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (07:45 IST)

பிரபல இயக்குனர் மீது வழக்குப்பதிவு: ‘திரெளபதி’ குறித்து சர்ச்சை கருத்து!

varma
குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி குறித்து சர்ச்சைக்குரிய பதிவு செய்த இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் ராம்கோபால் வர்மா சர்ச்சைக்குரிய ஒரு பதிவு செய்திருந்தார்
 
குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி என்றால் பாண்டவர்கள் யார்? கௌரவர்கள் யார்? என்ற கேள்வியை அவர் எழுப்பியிருந்தார். இது பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது உத்தரப் பிரதேச மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்/ இதையடுத்து அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது