1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : புதன், 21 ஆகஸ்ட் 2024 (07:50 IST)

நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு வழக்கு: ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கோரியதால் பரபரப்பு..!

பிரபல காமெடி நடிகர் வடிவேலு தன்னுடன் நடித்த நடிகர் சிங்கமுத்து மீது மான நஷ்ட வழக்கு தொட்டுத்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சிங்கமுத்து யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்தபோது தன்னை பற்றி தரக்குறைவாக பேசியதாகவும், இது பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், எனவே சிங்கமுத்து ஐந்து கோடி ரூபாய் எனக்கு நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அதுமட்டுமின்றி என்னை பற்றி அவதூறு பரப்ப சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டனர். இதனை அடுத்து நீதிபதி இந்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நடிகர் வடிவேலு மற்றும் சிங்கமுத்து ஆகிய இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர் என்றும் கடந்த சில ஆண்டுகளாகவே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2015 ஆம் ஆண்டு இருவருக்கும் மேற்பட்ட பிரச்சனையை அடுத்து சேர்ந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva