புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 3 மே 2021 (13:18 IST)

4 வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் ரீமேக் ஆகும் 8 தோட்டாக்கள் திரைப்படம்!

2017 ஆம் ஆண்டு  வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்ற திரைப்படம் ‘8 தோட்டாக்கள்’இப்போது தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.

2017 ஆம் ஆண்டு வெற்றி, அபர்ணா பாலமுரளி மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகிய திரைப்படம் 8 தோட்டக்கள். இந்த படத்தினை மிஷ்கினின் உதவியாளர் ஸ்ரீகணேஷ் இயக்கி இருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக, இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள எம்.எஸ். பாஸ்கரின் கதாபாத்திரம் அமெரிக்காவில் வெளியாகி பேய் ஹிட் அடித்த பிரேக்கிங் பேட் என்ற சீரியலின் கதாநாயகனை அடியொற்றி உருவாக்கப்பட்டது. ஸ்ரீகணேஷின் திறமையான இயக்கம் மற்றும் பாஸ்கரின் நடிப்பால் அந்த கதாபாத்திரம் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் இப்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் ரீமேக் உரிமையை சுஷ்மிதா கொனிடெலா வாங்கி இப்போது முன் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.