8 நிமிடத்திற்கு ரூ.20 கோடி: கெத்து காட்டும் எஸ்.ஜே. சூர்யா!!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் பத்தில் மகேஷ் பாபு நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கிறார். படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
இந்நிலையில் படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் ஒரு காட்சிக்காக தயாரிப்பு தரப்பு ரூ. 20 கோடி வரை செலவழித்துள்து.
அந்த காட்சி 8 நிமிடங்களுக்கு மட்டுமே. படத்தின் நாயகர்களுக்கு மாஸ் காட்ட பல கோடிகள் செலவு செய்யும் இந்த காலத்தில், வில்லன் வரும் காட்சிக்காக இவ்வளவு செலவு செய்துள்ளது அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.