விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘விக்ரம்’ திரைப்படம்: ரசிகர்கள் மகிழ்ச்சி!
கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த 1886 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் இன்று விஜய் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த படத்தை இன்றைய தலைமுறையினர் மிகவும் ரசித்து பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது]
கமல்ஹாசன், அம்பிகா, சத்யராஜ், டிம்பிள் கபாடியா, லிசி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜசேகர் இயக்கியிருந்தார் என்பதும், இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது
எழுத்தாளர் சுஜாதாவின் கதை வசனத்தில் உருவான இந்த படம் அன்றைய தேதியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது அதே பெயரில் மீண்டும் ஒரு விக்ரம் படம் வெளியாக இருக்கும் நிலையில் பழைய விக்ரம் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது