வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வியாழன், 1 செப்டம்பர் 2016 (12:35 IST)

சினி பாப்கார்ன் - தொலைக்காட்சி தொடருக்காக இணையும் வெற்றிமாறன், கௌதம், பாலாஜி மோகன்

அண்ணன் தங்கை பாசக் கதையில் சூர்யா
 
வித்தியாசமான கதையைப் பார்த்துதான் சூர்யா கால்ஷீட் தந்துகிட்டிருந்தார். நாலைந்து வெற்றியை பார்த்ததும் அவருக்கும் ஆக்ஷன் ஹீரோவாகணும்னு கனவு. கார்த்திக்கும் அப்படியே. வெறும் அடிதடி படத்தில் நடித்ததில் தோல்விதான் கிடைச்சதே தவிர வெற்றி கிடைக்கலை.


 
நல்லவேளையா மெட்ராஸ் படம் கார்த்தியை தடுத்தாட் கொண்டது. இப்போவெல்லாம் அவர் ஒழுங்கா கதை கேட்கிறதா கேள்வி.
 
சூர்யாவுக்கு தொடர் தோல்வி. இந்த நேரத்துலதான் முத்தையா படத்துல நடிக்கப் போறார். இதுவொரு கிராமத்து கதை. அண்ணன், தங்கை பாசம் பிரதானமா வருதாம். தங்கை கேரக்டர்ல நடிக்க ரித்திகா சிங்கை கேட்டிருக்காங்க. நாயகி கீர்த்தி சுரேஷ். 
 
உணர்வுபூர்வமான படத்துல சூர்யாவை பார்த்து ரொம்ப நாளாச்சு. அதை இந்தப் படம் தீர்க்கும்னு நம்பலாம். உணர்வுபூர்வம்னு சாதிபூர்வமா எடுத்திடதீங்க முத்தையா சார்.
 
கௌதம், வெற்றிமாறன், பாலாஜி மோகன் முக்கூட்டணி
 
இந்த விஷயம் இப்போதைக்கு ஆரம்பகட்டத்துலதான் இருக்கும். ஆனாலும், நல்ல விஷயம், உடனே சொல்லணும் இல்லையா.
 
மத்த மொழிகள்ல நாலைஞ்சு டைரக்டர்ஸ் சேர்ந்து படம் இயக்குறது, படம் தயாரிக்கிறது, டிவி தொடர் இயக்குறதெல்லாம் அவ்வப்போது நடக்கிறதுதான். தமிழ்ல அப்படியில்லை. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்னு போட்டதான் மரியாதைன்னு நினைக்கிறவங்க, அடுத்தவங்ககூட கூட்டு சேர ஆயிரம் தடவை யோசிப்பாங்க. 
 
ஒரு நல்ல செய்தி... கௌதம், வெற்றிமாறன், பாலாஜி மோகன் மூணு பேரும் சேர்ந்து ஒரு தொலைக்காட்சி தொடரை இயக்க பிளான் பண்ணியிருக்காங்க. மூணு பேருமே  பிஸியான டைரக்டர்ஸ் அதனால புராஜெக்ட் டேக்ஆஃப் ஆக கொஞ்சம் முன்ன பின்ன ஆகலாம். 
 
ஏதோ நடந்தா சரிதான்.
 
கால்ஷீட் தந்து தாங்க்ஸும் சொன்ன துல்கர் சல்மான்
 
மலையாளத்தில் சத்தியன் அந்திக்காடுன்னு ஒரு டைரக்டர் இருக்கார். ஐம்பதுக்கு பக்கம் படம் பண்ணியிருக்கார். ஒவ்வொண்ணும் தங்கம். மலையாளிகளோட வாழ்க்கையை அப்படியே பெயர்த்து எடுத்து திரையில பார்க்கிற மாதிரியே இருக்கும்.
 
இந்தகால ஸ்டார்களுக்கு அவர்னா துச்சம்னு ஒரு விமர்சனம். துல்கர் சல்மான், பகத் பாசில் மாதிரி நியூ ஜெனரேஷன் அவரை ஒதுக்குறாங்க, அஞ்சலி மேனன் மாதிரி ஹைடெக் இயக்குனர்களுக்குதான் கால்ஷீட் தர்றாங்கன்னு ஒரு பொகைச்சல்.
 
காட்ஸ் ஓன் கன்ட்ரிங்கிற சத்தியன் அந்திக்காடு படத்துல நடிச்சி தன் மேலயிருந்த களங்கத்தை பகத் போக்கிட்டார். இப்போ துல்கர் சல்மானின் முறை. சத்தியன் அந்திக்காடோட படத்துலதான் அவர் இப்போ நடிச்சிட்டிருக்கார். பலரும் நினைச்சது போல் சத்தியன் அந்திக்காடை அவர் லேசா நினைக்கலை. மாஸ்டர்னு கூப்பிட்டு சமூகவலைத்தளத்துல புகழோ புகழ்னு புகழந்திருக்கார். உங்க படத்தைப் பார்த்துதான் வளர்ந்தோம், உங்க கதாபாத்திரங்கள் இப்பவும் எங்க உள்ளுக்கிருக்குன்னு ஒரே உருகல். பட், நியாயமான உருகல்.
 
ஒரு சத்தியன் அந்திக்காடு ஃபேனா நாங்க ரொம்ப ஹேப்பி துல்கர்.
 
இறங்குற மார்க்கெட்டுக்கு அறுபது கோடியா?
 
மூணு கான் நடிகர்களோட படம்தான் இந்தியில சக்கை போடு போடுது. நடுவுல ஹிர்த்திக் ரோஷனோட படங்களும் சிக்சர் அடிக்கும். தொடர்ச்சியா இல்ல, அப்பப்ப. 
 
ஹிர்த்திக்கோட சம்பளம் கான் நடிகர்களோட சம்பளத்தைவிட அப்பவே அதிகம். இப்பயெல்லாம் கான்கள் லாபத்தில் பங்குன்னு பெருசா லபக்கிடறாங்க. ஆனாலும், சம்பளம்னு பார்த்தா ஹிர்த்திக்தான் டாப்.
 
வரிசையாக படங்கள் சுமாரா போகிற நிலையில் மொகஞ்ச தாரோ வந்திச்சி. அதுவும் சுமார்தான். இந்த மாதிரி நேரத்துல ஆதித்யா சோப்ராவோட யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிக்கிற படத்துல நடிக்க நம்மாள் அறுபது கோடி கேட்டிருக்கிறாரு. தம்பி நீங்க அதுக்கு வொர்த் இல்லைன்னு கொஞ்சம் குறைக்க சொல்லியிருக்கார் ஆதித்ய சோப்ரா. ஆனா, ஹிர்த்திக் அறுபதிலேயே விடைச்சிட்டு நிக்க, தம்பி போயட்டு வாங்கன்னு சலாம் போட்டு அமீர் கானை ஒப்பந்தம் பண்ணிட்டாரு. 
 
படம் ஓடிச்சின்னா அமீர் கானுக்கு லாபத்துல பங்கு, ஊத்திக்கிச்சுன்னா நஷ்டத்துல பங்கு... ஆதித்யா சோப்ரா இப்போ ஹேப்பி அண்ணாச்சி.