1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

தினமும் கருடனை வணங்குவதால் இத்தனை பலன்கள் உண்டா....?

கருடனுக்கு கருடாழ்வார் என்று சிறப்பு தருகிறது புராணங்கள். இந்த கருட பகவானை குறிப்பிட்ட நாட்களில் பார்த்தால் குறிப்பிட்ட பலன்களை  பெறலாம்.
திருமாலின் வாகனமாக இருப்பவர் கருடன். பறவைகளின் அரசானாக விளங்கும் கருடன், மங்கள வடிவமாக கருதப்படுகிறார். அமிர்தத்தை  தேவ லோகத்தில் இருந்து கொண்டு வந்த பெருமை இவரை சாரும். கோவிலிலும், வீட்டிலும் கருடனை தினம்தோறும் வணங்குவதன் மூலம்  நாக தோஷம் நீங்கும். தோல் வியாதிகள் குணமடையும். திருமணமான பெண்களுக்கு அறிவும், ஆற்றலும் நிறைந்த குழந்தை பிறக்கும். தீராத  நோய்கள் தீரும்.
 
பெருமாள் கோவில்களுக்கு செல்வோர் கருடனை வழிபட்ட பின்னரே மூலவரை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும். கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கும்போது கருடன் வந்து வட்டமிட்டால் மட்டுமே அந்த கும்பாபிஷேகம் முழுமை அடைகிறது.
 
வைஷ்ணவத்தில், கருடாழ்வாரை பெரிய திருவடி என்று போற்றுவார்கள். எல்லா பெருமாள் கோயில்களிலும், பெருமாள் சந்நிதிக்கு எதிரே, பெருமாளை தரிசித்தபடியே, கைக்கூப்பி தரிசித்தபடியே நின்றுகொண்டிருக்கும் கருடாழ்வாரைத் தரிசிக்கலாம்.
 
பறவைகளில் கருடன்தான், ராஜபட்சி. அதாவது பறவைகளின் தலைவன். அப்பேர்ப்பட்ட பறவைகளின் ராஜாவான கருடன், ஆழ்வார் எனும் பெருமைமிகு சொல்லைப் பெற்றுக்கொண்டு, பெரிய திருவடியாக, கருடாழ்வாராக ஆலயங்களில் காட்சி தருகிறார்.
 
மாதந்தோறும் வருகிற வளர்பிறை பஞ்சமி திதி நாளில், கருடாழ்வாரை வணங்கி வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும். அதேபோல், சுவாதி நட்சத்திர நாளில் கருடாழ்வாரை வணங்குவது வளம் சேர்க்கும்.
 
நாம் வெளியே செல்லும் தருணத்தில், கருடன் வலமிருந்து இடம் சென்றால், எடுத்த காரியம் வெற்றி அடையும் என்பது ஐதீகம். அதேபோல், கருடன் வட்டமிட்டுப் பறந்தால், நலமும் வளமும் நிச்சயம். தேசமும் சுபிட்சம் பெறும்,
 
நாட்களும் பலன்களும்:
 
ஞாயிறு: நோய் நீங்கும். திங்கள்: குடும்பம் செழிக்கும். செவ்வாய்: உடல் பலம் கூடும். புதன்: எதிரிகளின் தொல்லை நீங்கும். வியாழன்: நீண்ட  ஆயுளை  பெறலாம். வெள்ளி: லட்சுமி கடாட்சம் உண்டாகும். சனி: மோட்சம் கிடைக்கும்.