ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சூக்கும பஞ்சாசரம் சிவாயநம சிறப்புகள் என்ன...?

சிவாயநம என்னும் அட்சரம் சிவனிருக்கும் அட்சரம் என சிவவாக்கியர் குறிப்பிட்டுள்ளார். இம்மந்திரம் இம்மை-மறுமைப் பயன்களை அளிக்கவல்லது. மாணிக்கவாசகப் பெருமாள் இம்மந்திரத்தை தவமிருந்து பெற்றார் என்பர். 

உலக இன்பங்களைத் தருவதோடு விரும்பும் காலத்தில் திருவடிப் பேற்றையும் அளிக்கவல்லது. நடராஜமூர்த்தியின் ஞான நடனத்திருக்கூத்தே சூக்கும பஞ்சாசரத்  திருமேனியாகும்.
 
சி - உடுக்கை ஏந்திய வலக்கரம். வா - தூக்கிய திருவடியைச் சுட்டும் இடதுகரம். ய - அஞ்சேல் என்றருளும் வலது அபயகரம். ந - அனலேந்திய இடக்கரம். ம -  முயலகனின்மேல் ஊன்றிய திருவடி. 
 
உலகப்பற்றை அறவே ஒழித்து திருவடிப்பேற்றை விரும்பும் ஆன்மாக்களுக்காக நிகழ்த்தப்பெறும் ஞானத்திருநடனம் இது. ஞான மார்க்கத்தின் இரண்டாவது படி இது. காரண பஞ்சாசரம் - சிவயசிவ.
 
ய என்பது உயிரைக் குறிப்பது உயிராகிய ய வுக்கு இருபுறமும் சிவசக்தி காப்பாக இருப்பதால், இம்மந்திரத்தை இதய மாணிக்க மந்திரம் என்பர். உலகப்பற்றை அறவே ஒழித்து திருவடிப் பேற்றிலே மூழ்கியிருக்கும் தவசீலர்கள், இம்மந்திரத்தை ஜெபிப்பதன்மூலம் இவ்வுடம் போடுகூடிய நிலையில் இவ்வுலகிலேயே பேரின்பத்தைப் பெறுவர்.