ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

வேண்டிய வரங்களை பெற மேற்கொள்ளவேண்டிய வழிபாட்டு முறைகள்..!

நம் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெற, நமது விருப்பங்கள் யாவும் நிறைவேற இந்த பரிகாரத்தை வீட்டிலேயே செய்யலாம்.
விருப்பங்களை நிறைவேற்றும் திருப்பதி ஏழுமலையானை சனிக் கிழமைகளிலும், விநாயகர், முருகன், மாரி, காளி, காமாட்சி போன்ற தெய்வங்களிடம்  விருப்பத்தை தெரிவிக்க விரும்பினால் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளிலும் இவ்வழிபாட்டை செய்யலாம். 
 
இதற்கு பச்சரிசி அல்லது தினைமாவில் ஏலக்காய், வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து அதை விளக்குபோல குழிவாகப் பிடித்து, அதனுள் நெய்விட்டு  பஞ்சுத்திரி போட வேண்டும். இஷ்ட தெய்வத்தின் முன் ஒரு வாழை இலை அல்லது தாம்பாளத்தில் இரண்டு தேங்காய் முறிகள், பழம், வெற்றிலை பாக்கு மற்றும் மாவிளக்கை வைத்து ஏற்ற வேண்டும். 
 
விளக்கேற்றியதும் நாம் எந்த தெய்வத்தை நினைத்து ஏற்றுகிறோமோ அந்த தெய்வம் வீட்டிற்குள் எழுந்தருளி இருப்பதாக எண்ணி, நம் விருப்பத்தை  நிறைவேற்றித் தரும்படி வேண்டிக் கொள்ள வேண்டும். அந்தந்த தெய்வங்களுக்குரிய ஸ்லோகம் அல்லது பாடல்களைப் பாடுவது பலன் தரும்.