திங்கள், 25 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவதற்கான காரணமும் அதன் பலன்களும்...!

கஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு பல கொடுமைகள் செய்து வந்தான். தன்னைக் காணும்போதெல்லாம் தோப்புக்கரணம் போட வேண்டும் என்றும் தொல்லை செய்து வந்தான். தேவர்களும் வேறுவழியின்றி அவன் சொல்வதை எல்லாம் செய்துவந்தனர். 
தேவர்கள் தங்களின் துயரம் தாங்காமல், விநாயகப்பெருமானிடம் முறையிட்டனர். தேவர்களின் பிரார்த்தனையில் மனம் கசிந்த விநாயகர், கஜமுகாசுரனை  சம்ஹாரம் செய்ய புறப்பட்டார். விநாயகரையும் தோப்புக்கரணம் போடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். மிகுந்த கோபம் அடைந்த விநாயகர் தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரனை அழித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேவர்கள் விநாயகப் பெருமானுக்கு தோப்புக்கரணம் போட்டு மரியாதை செய்தனர். அன்று முதலே விநாயகருக்கு தோப்புக்கரணம் இடும் முறை உண்டானது.
 
தோப்புக்கரணம் போடுவதால் உண்டாகும் பலன்கள்:
 
நமது முன்னோர்கள் விநாயகர் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தையும் வைத்திருந்தனர். தோப்புக்கரணம் போடும்போது நமது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.
 
காது மடல்களைப் பிடித்து தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான ஒரு தூண்டுதல் கிடைக்கிறது. உட்கார்ந்து  எழும்போது, காலில் உள்ள 'சோலியஸ்' எனும் தசை இயங்க ஆரம்பிக்கிறது. சோலியஸ் தசையால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். இதயத்தின்  தசைகளை போன்றே இது வேலை செய்கிறது .
 
தோப்புகரணம் போடும்போது வலது கை இடது காதின் கீழ் பகுதியையும் இடது கை வலது காதின் கீழ் பகுதியையும் சற்று இருக்காமாக அழுத்தி பிடித்து  முழுமையாக உட்கார்ந்து எழ வேண்டும்.
 
தோப்புகரணம் போடும்போது உடலில் ஏற்படும் மாற்றங்கங்களை ஆராய்ந்த அமெரிக்க நிபுணர்கள், இந்த எளிய உடபயிற்சியின் மூலம் மூளையின் நியூரான்  செல்கள் புத்துணர்ச்சி அடைகின்றன என்பதை கண்டு பிடித்துள்ளனர்.
 
தோப்புகரணம் போடுவதால் காதுகளின் முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளை அழுத்தி பிடிப்பதினால் மூளையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் மூளை  புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிக்கின்றன.