வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 15 ஜனவரி 2022 (13:37 IST)

பிரதோஷங்களில் மிக முக்கியமான சனி பிரதோஷம் !!

பிரதோஷங்களில் மிக முக்கியமானது சனி பிரதோஷம் ஆகும். திரியோதசி திதியும் சனிக் கிழமையும் சேர்ந்து வருவது சனி பிரதோஷம்.


ஏனெனில் சிவபெருமான், தேவர்களைக் காப்பாற்றுவதற்காக ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே பிரதோஷ நேரம் சனிக்கிழமையன்று வந்தால் சனி பிரதோஷம் எனச் சிறப்பு பெறுகிறது.

பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை முப்பது முக்கோடி தேவர்கள் பிரம்மா, விஷ்ணு அனைவரும் வணங்கி ஆசி பெறுவார்கள். அவர்களைப் போலவே பிரதோஷ நேரத்தில் நாமும் சிவபெருமானை வணங்கி நம் துன்பங்களை அடியோடு போக்கிக்கொள்ள பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.

பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். அதேபோல் நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப ஏழரைச்சனி, அர்த்தாஷ்ட ம சனி, கண்ட சனி, அஷ்டமச்சனி ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள், சனி பிரதோஷ வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் சனீஸ்வர பகவானின் கோபம் தணிந்து துன்பங்கள் நீங்கும்.