ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : சனி, 23 ஏப்ரல் 2022 (12:14 IST)

திருவோண விரதம் இருப்பதால் உண்டாகும் அற்புத பலன்கள் !!

Thiruvonam Vratham
திருவோண விரதத்தை மேற்கொள்பவர்கள் முதல் நாள் இரவே உணவு உண்ணக் கூடாது. திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயத்து சென்று துளசி மாலை சாத்தி தரிசித்து வரவேண்டும்.


காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். பெருமாள் பாடல்களை பாராயணம் செய்தல் வேண்டும்.மதிய உணவில் உப்பு சேர்க்காமல் சாப்பிட வேண்டும்.

மாலையில் சந்திரனை தரிசிக்க வேண்டும். இப்படி செய்தால் சந்திரனின் முழு அருள் கிடைப்பதோடு, சந்திர தோஷம் இருந்தால் நிவர்த்தி ஆகும். நல்ல இனிமையான வாழ்க்கை அமையும்.

திருவோண விரதம் இருப்பதால் கல்விச் செல்வம், மற்றும் பொருட்செல்வம் அனைத்தும் பெருகும். திருவோண விரதத்தன்று நாம் இறைவனுக்கு நெய்வேதனம் செய்வது வழக்கம். சுண்டல் பிரசாதமாக பெருமாளுக்கு படைத்தால் நன்மைகள் நடக்கும்.

திருவோண நட்சத்திரத்தன்று திருவோண விரதம் இருந்தால் சந்திரதோஷம் விலகுவதுடன், சந்தோஷ மான வாழ்வு அமையும்.

திருவோண விரதம் இருக்கும் பக்தர்கள், மகா விஷ்ணுவை வணங்கி அவரின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே இருங்கள். விஷ்ணு புராணங்களைப் பாராயணம் செய்யலாம்.