செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சிவன் பூஜைக்கு உரிய வில்வத்தை ஏன் வளர்க்க வேண்டும்...!

சிவ தலங்களில் வில்வத்திற்கு மிகவும் மகிமை உண்டு. லிங்கத்திற்கு பூஜிக்க மிக உகந்தது இந்த வில்வ இலைகள் ஆகும். இந்த வில்வ இலைகள்  கிடைப்பதற்காக அனேகமாக சிவன் கோவில்களில் எல்லாம் வில்வ மரம் வளர்க்கப்படும்.

வில்வம் குளிர்ச்சியூட்டும் குணமுடையது. அதாவது இதை உண்டால்  உடலாகிய பஞ்ச பூதம் வெகு எளிதில் அதிக சக்தியை செலவழிக்காமல் ஜீரணம் செய்த சக்தியும் சேமிப்பாகும்.
 
சிவத்துக்குள் சக்தியை அதிகம் சேமிக்க செய்யும் ஒரு மூலிகையாக இது இருப்பதால் இது ஈசார்சனைக்கு மிக உகந்ததாகும். இதனை “சிவமூலிகைகளின்  சிகரம்” எனவும் அழைப்பர். இந்த இலைகளை கொண்டு ஈசனை பூஜிப்பதால் சகல பாவங்களும் நீங்கும். இந்த வில்வ மரத்தினை வளர்ப்பதால் அசுவமேத  யாகம் செய்த பலன் கிடைக்கும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும். புண்ணிய நீர் ஆடிய பலன் கிடைக்கும்.காசி முதல் இராமேஸ்வரம்  வரை உள்ள சிவ தல தரிசனப் பலன் கிடைக்கும்
 
வில்வ மரத்தில் அபார மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. வில்வ காயை பறித்து பார்த்தால், உருண்டையாகவும் ஓடு கடினமாகவும் வெளிர் மஞ்சள் நிறத்தையும் கொண்டது. இதன் பழமானது குடற் கோளாறுகளை நீக்கவும்இமலக்கட்டை நீக்கி உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.வில்வ இலை  கசாயம் பருக கைகால் பிடிப்பு, உடல் வலி முதலியவை குறையும் மேலும் இந்த கசாயமானது கபம், மூச்சுத் திணறல், பித்தம் போன்றவையை குணமாக்கும்.