மஹா பெரியவா சிந்தனை துளிகளில் சில...!!
மனதால் உயர்ந்து விட்டால் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து விடும். அதன்பின் வாழ்க்கையைத் தள்ளிச் செல்வதில் ஒரு சிரமமும் இருக்காது.
விஞ்ஞானம் வெளியுலக அறிவோடு நின்று விடாமல், உள்ளத்தின் உண்மையையும் ஆராயப்பயன்பட வேண்டும்.
மனதில் எழும் துக்கத்தை ஞானம் என்னும் தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய குடம் போல துக்கம் பரமலேசாகி விடும்.
அன்பே சிவம் என்கிறார் திருமூலர். அறிவே தெய்வம் என்கிறார் தாயுமானவர். இந்த அன்பையும், அறிவையும் அம்பிகை நமக்கு வழங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.
கடவுள் நாம் இயங்க சக்தியையும், சிந்திப்பதற்கு நல்ல புத்தியையும் கொடுத்திருக்கிறார். அதைக் கொண்டு வாழ்வில் நல்லதைச் செய்யுங்கள்.
வியாதி வந்த பின் மருந்து சாப்பிடுவதைவிட, வராமலே தடுப்பது தான் புத்தசாலித்தனம். உடல்நலத்தைப் பேணும் விதத்தில் மாதம் ஒருமுறையாவது விரதமிருக்க வேண்டும்.
சமநிலையில் உள்ளவர்களுக்கிடையே காணும் அன்புதான். நட்பு, கடவுளிடமும், மேல் மட்டத்தில் உள்ளவர்களிடமும் காட்டும் அன்பு. பக்தி நமக்குக் கீழ்ப்பட்டவரிடம் காட்டும் அன்பு க்ருபை எனப்படும். எல்லோரிடமும் அன்பு என்னும் அஸ்திவாரத்தின் மீது வாழ்க்கை என்னும் உயர்ந்த கட்டிடத்தை நிர்மாணிக்க வேண்டும். தர்மமே நம்முடைய வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.