1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கிருஷ்ண ஜெயந்திக்கு பலகாரங்கள் செய்ய வேண்டுமா...?

இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்திக்கு வித்தியாசமான ரெசிபியை செய்ய நினைத்தால், இவ்வாறு செய்யலாம்.

1. தேங்காய் பர்ஃபி: தேங்காய் பர்ஃபி கொஞ்சம் அதிக இனிப்பு சுவையுடைய பலகாரம் தான். ஆனாலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அது கட்டாயம் கோகுலாஷ்டமி படையலில் இருக்கும். தேவையான பொருள்கள் தேங்காய் துருவல் - 2 கப் சர்க்கரை - 2 கப் கடலை மாவு - 2 ஸ்பூன் நெய் - தேவையான அளவு ஏலக்காய் பொடி - சிறிதளவு முந்திரி - தேவையான அளவு (உடைத்தது).
 
செய்முறை :  சர்க்கரையை சிறிது தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும்வரை பாகு காய்ச்சிக் கொள்ள வேண்டும். அதற்குள்ளாகவே தேங்காய் துருவலை போட்ட நன்கு கிளற வேண்டும். மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து, சிறிது நெய்விட்டு, அதில் கடலை மாவைப் போட்டு வறுத்து, தேங்காய்க் கவலையில் கொட்டி, அதனுடன் சிறிது ஏலக்காய்த் தூளையும் சேர்த்துக் கிளறுங்கள். அப்போது பர்ஃபி பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும். சுருண்டு வரும் வேளையில், ஒரு தட்டில் நெய் தடவி,அதை சமமாக தட்டில் துண்டுகள் போடவும். அதன்மேல் முந்திரி பருப்பை மேலே தூவ வேண்டும். இப்போது, சுவையான தேங்காய் பர்ஃபி ரெடி!
 
2. திரட்டிப்பால்: திரட்டிப்பால் என்பது கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவுப்பொருள். இது கிருஷ்ண ஜெயந்தி படையலில் கட்டாயம் இடம் பெறுகின்ற ஒரு இனிப்பு வகையாக இருக்கும். தேவையான பொருள்கள் பால் - 1 லிட்டர் வெல்லம் - 300 கிராம் ஏலக்காய் பொடி - சிறிது நெய் - தேவையான அளவு முந்திரி - தேவையான அளவு.
 
செய்முறை :- அடி கனமான பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து, 1 லிட்டர் பாலை ஊற்றி, அதை சிறு தீயினில் வைத்து நன்கு காய்ச்ச வேண்டும். பால் நன்கு கொதித்த பின், சுண்ட ஆரம்பிக்கும். நன்கு பால் மூன்றில் ஒரு பங்காக சுண்டுகிற வரையில், காய்ச்ச வேண்டும். பால் நன்கு சுண்டியதும் அதில் வெல்லம் மற்றும் ஏலக்காய்த் தூய் ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளற வேண்டும். பால் இன்னும் சுண்ட ஆரம்பித்து சுருண ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் அடுப்பில் இருந்து இறக்கி, நெய்விட்டு கிளறி, அதன்மேல், முந்திரி விட்டு கிளறவும். சுவையான திரட்டுப் பால் ரெடி. ஆனால் கட்டாயம் சிறு தீயில் (சிம்மில்) வைத்து தான் கிளற வேண்டும்.
 
3. இனிப்பு சீடை: பதப்படுத்திய அரிசி மாவு (ஈரத்தை வறுத்தது) - 4 கப் வெல்லம் - 3 கப் தேங்காய் துருவல் - 1 ஸ்பூன் ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன் வெள்ளை எள் - 1 ஸ்பூன் வறுத்த உளுந்து மாவு - 3 ஸ்பூன் நெய் - சிறிதளவு பொரிக்க எண் - தேவையான அளவு.
 
செய்முறை : பச்சை அரிசியை ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி விடுங்கள். அதன்பின் லேசாக உலர்ந்த பின், மிக்சியில் போட்டு, நைசாக மாவை அரைத்துக் கொள்ளுங்கள். (அரிசி மாவுக்கு பதில் மைதா உபயோகித்தும் சீடை செய்யலாம்.) அந்த அரிசி மாவு அல்லது மைதாவை வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். நைசாக இருக்கும் மாவை கொஞ்சம் கொரகொரப்பாக வரும்வரை வறுக்க வேண்டும். அப்போது தான் சீடை பொரிக்கும்போது, வெடிக்காமல் இருக்கும். அதனுடன் எண்ணெயைத் தவிர மற்ற அனைத்து பொருள்களையும் மாவுடன் போட்டு, நன்கு பிசைந்து சிறிதளவு வெந்நீர் சேர்த்து நன்கு கெட்டியாகப் பிசையுங்கள். 
 
ஒரு ஈரத்துணியில், சிறிய பிள்ளையாரை ஓரமாகப் பிடித்துவிட்டு, பின் சிடை மாவை சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். மாவை மிக அழுத்தி உருட்டக் கூடாது. வாணலியில் எண்ணெய் விட்டு, நன்கு காய்ந்ததும் சீடையைப் போட்டு பொரித்து எடுங்கள். மிதமான தீயில் வைத்து மொறுமொறுப்பாக எடுக்கவும். பொன் வறுவலாக பொரித்து எடுத்தால் மனமும் சுவையும் அதிகமாக இருக்கும்.