தொடர்புடைய செய்திகள்
- ஓம் என்னும் மந்திரத்தை உச்சரிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன...?
- காரடையான் நோன்பு எதற்காக கடைப்பிடிக்கப்படுகிறது தெரியுமா...?
- காரடையான் நோன்பன்று கயிறு கட்டிக் கொள்ளும்போது சொல்லவேண்டிய மந்திரம்...!
- காயத்ரி மந்திரத்தை எவ்வாறு முறையாக ஜெபிக்கவேண்டும் என்பதை பார்ப்போம்...!!
- சர்வ கிரக தோஷ நிவாரண பரிகாரம்...!!
நோய்களை தீர்க்கும் அற்புத ஸ்ரீ தன்வந்திரி மந்திரம்...!
இந்து மதத்தில் நோய்களை நீக்கும் தெய்வமாக “தன்வந்திரி பகவான்” கருதப்படுகிறார். அந்த தன்வந்திரி பகவானுக்கு மேற்கொள்ளும் “தன்வந்திரி விரதம்” பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் இங்கு அறிந்து கொள்ளலாம்.
மாதந்தோறும் வரும் தேய்பிறை திரியாதசி தினத்தில் தன்வந்திரி விரதம் மேற்கொள்ளலாம் என்றாலும் தன்வந்திரி விரதம் மேற்கொள்வதற்கு சிறந்த தினமாக கருதப்படுவது ஐப்பசி மாதத்தில் வருகிற தேய்பிறை திரியாதசி தினமாகும்.
ஸ்ரீ தன்வந்திரி மந்திரம்:
ஓம் நமோபகவதே வாசு தேவாய
தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய விநாசனாய த்ரைலோக்யநாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நம:
எல்லோருக்கும் வரம் தருபவரும் வாசுதேவராக இருப்பவரும், அமிர்த கலசத்தை கையில் ஏந்தியிருப்பவரும், சகல நோய்களை தீர்க்க மூவுலகத்தை காண்பவரும், மகாவிஷ்ணுவாக அவதரித்திருப்பவரும் ஆகிய தன்வந்திரி கடவுளே உன்னை வணங்குகிறேன். எனக்கு வந்திருக்கும் நோய்களை கண்ணுக்கு தெரியாமல் நீக்குவாயாக.
அடுத்த கட்டுரையில்
