1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

எந்த கிழமைகளில் பிரதோஷ வழிபாடு செய்வது நல்லது...?

ஞாயிறு பிரதோஷம்: சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். பலன்: இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு  கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

திங்கள் பிரதோஷம்: பிரதோஷத்தில் ஸோமவரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள்  திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
 
பலன்: மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.
 
செவ்வாய் பிரதோஷம்: செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.  மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.
 
பலன்: செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும். பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு  செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும்  ருனமும், ரணமும் நீங்கும் என்பது சிவ வாக்கு.
 
புதன் பிரதோஷம்: புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
 
பலன்: புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன்  அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.
 
வியாழன் பிரதோஷம்: குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும்.
 
பலன்: கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.
 
வெள்ளி பிரதோஷம்: சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
 
பலன்: உறவு வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
 
சனி மஹா பிரதோஷம்: சனி பிரதோஷம் என்று கூரமட்டர்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால் அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி  நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.
 
பலன்: ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். பஞ்சமா பாவமும் நீங்கும்.  சிவ அருள் கிட்டும்.