காலில் விழுந்து ஆசி பெறுவது சக்தியை அதிகப்படுத்த உதவுமா....?
ஒரு ஞானியையோ அல்லது மகானையோ பார்க்கும்போது அவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறும்போது அவர்களின் சக்தி நமக்கும் கிடைக்கிறது.
காலை தொடுதலின் மூலம் இந்த சக்தி பரிமாற்றம் நடக்கிறது. கோயிலுக்குச் சென்றால் தரையில் விழுந்து கடவுளை வணங்குவதற்கும் காரணம் உண்டு.
நீங்கள் தரையில் விழுந்து வணங்குவதை சாஷ்டாங்க நமஸ்காரம் என்பார்கள். கோயிலில் இருக்கும் சக்தி பெற்றுக் கொள்ளும் தன்மையானது அனைவரின் உடலுக்கும் இருப்பதில்லை. சக்தியை இயல்பாக பெற்றுக் கொள்ளும் தன்மை இல்லாத பட்சத்தில் உங்கள் உடலுக்கும் கோயிலில் இருக்கும் சக்திக்கும் ஒரு தொடர்பை உருவாக்க வேண்டும் என்றால் கோயிலின் தரையில் அமர வேண்டும் அல்லது இந்த சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
சொல்லும் வார்த்தைகளில் சக்தி இருக்கிறது..மனப்பூர்வமாக ஒருவர் ஆசி வழங்கும்போது அதன் சக்தி அளவிட முடியாதது. பல பாவங்களையும், தோசங்களையும் போக்குகிறது பெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுவது சக்தியை அதிகப்படுத்த உதவும்.
ஜோதிடம், ராசிபலன், சாஸ்திரம், மத நம்பிக்கைகள் இவற்றை கடைபிடிப்போர் கூட பலர் அடுத்தவருக்கு மரியாதை கொடுப்பதில் தயக்கம் காட்டுவர். பெரியோர், மகான்கள், சாதனை புரிந்தோர், மகான்களை சந்தித்தோர், நம் வீட்டுக்கு வரும் மூத்த தம்பதிகள் இவர்களிடம் நாம் ஆசி பெறுவதால் அவர்களின் நல்ல எண்ணங்கள் நம்மை பலப்படுத்தும்.