திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

எந்த நாளில் சத்யநாராயண பூஜை செய்ய உகந்தது....?

சத்யநாராயண பூஜையை வீட்டிலேயே செய்துவிடலாம். அருகில் உள்ள கோயில்களில் இப்பூஜை செய்யப்பட்டால் கலந்து கொண்டு நலம் பெறலாம். பொதுவாக இந்தப் பூஜை செய்யப்படுவதே பதினாறும் பெற்று பெருவாழ்வு அடையத்தான்.

பூஜை தொடங்குவதற்கு முன்பே கலந்துகொள்பவர்கள் வந்துவிட வேண்டும். பின்னர் இறுதிவரை அங்கேயே இருந்து பிரசாதத்தைப் பெற்று அங்கேயே சிறிது  உண்டுவிட்டுப் பின்னர் இல்லத்துக்கும் எடுத்து வரலாம்.
 
இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், குடும்பத்தில் கஷ்டங்கள் குறையும், செல்வ வளம் பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். பெற்றோருக்கு நற்பெயர்  வாங்கித்தரும் குழந்தைகள் பிறக்கும் என்கிறது கந்த புராண சுலோகம்.
 
ஸ்ரீ சத்யநாராயணன் பற்றிய கதை கந்த புராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பூஜையை செய்ய வேண்டிய முறைகள் பற்றியும் கந்த புராணத்தில்  கொடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த பூஜை ஏதேனும் ஒரு முக்கிய நிகழ்வுகளுக்கு முன்பு செய்வது உண்டு. பொதுவாக பௌர்ணமியன்று மாலை வேளையில் இந்த பூஜை செய்யப்படுகிறது. சித்ரா பௌர்னமி மிகவும் விசேஷம் என்றாலும் மற்ற  விசேஷ நாட்களிலும் இந்த பூஜையை செய்யலாம்.

அக்‌ஷய திருதியை நாளிலும் இந்த பூஜையை செய்வது  விசேஷமே. குடுப்பத்தில் நல்ல காரியங்கள் நிகழ்வதில் தடை இருந்தாலோ, பொருளாதாரத்தில் தடை இருந்தாலோ இந்த பூஜையை வருடம் முழுவதும் எல்லா பௌர்ணமி, ஏகாதசி போன்ற நாட்களில் செய்து வரலாம்.