வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

இந்த பொருட்களை வைத்து சிவபெருமானை வழிப்பட கூடாது ஏன்..?

கடவுளை வீட்டில் வைத்து வழிபடும்போது சில முக்கியமான தகவல்களை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
வீட்டில் எந்த பூஜை செய்தாலும் அதற்கு பிரசாதமாக அரிசியால் செய்யப்பட்ட பொருளை வைத்து வழிப்படுங்கள். ஏனெனில் அரிசிதான் கடவுள்களின் உணவாக இருந்தது என்று புராணக் குறிப்புகள் கூறுகிறது. 
 
அதேபோல வெற்றிலையை வைத்து வழிபடுவதையும் வழக்கமாக்கி கொள்ளுங்கள். வெற்றிலை கடவுளுக்கு மிகவும் பிடித்த பொருளாகும். இவை தவிர ஏலக்காய் மற்றும் எலுமிச்சை போன்ற பொருட்களையும் வைத்து வழிபடலாம். பூஜையின்போது மண் விளக்கு ஏற்றி வைக்கவும்.  விளக்கு எப்போதும் கடவுளை நோக்கியே இருக்க வேண்டும்.
 
ஒவ்வொரு கடவுளுக்கும் பிடித்த நிறம் என்று ஒன்றிருக்கும். அந்த நிற உடை அணிந்து கடவுளை வழிபடும்போது உங்களுக்கு ஆண்டவனின்  அருள் பூர்ணமாக கிடைக்கும்.
 
குலதெய்வத்தின் படத்தையோ அல்லது உருவச் சிலையையோ வழிபாடு செய்வதால் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்க மிகவும் அவசியமானதாகும். பூஜையறையில் எல்லா கடவுள்களையும் வைத்து வழிபடுவது போல சிவபெருமானை வழிப்படக்கூடாது. மற்ற கடவுள்களுக்கு வைத்து வழிபடும் சில பொருட்கள் சிவபெருமானின் கோபத்தை தூண்டக் கூடியவை ஆகும்.
 
மஞ்சள், கேதகை மலர், துளசி, தேங்காய் தண்ணீர் போன்றவற்றை வைத்து வழிபடுவது சிவபெருமானின் சாபத்தை உங்களுக்கு பெற்றுத் தந்து நிச்சயம் அழிவையும் ஏற்படுத்தும். சிவனுக்கு படைத்த எந்த உணவையும் சாப்பிடவும் கூடாது.