ஒருவருக்கு ஜோதிடப் பலன்கள் பலிக்காமல் போவது ஏன் தெரியுமா...?

கால நேரம், கிரகங்கள் சுழற்சி இதனை ஈர்க்கும் சக்தியாக இருக்கும். நமது பூமியின் சுற்றுவட்டப்பாதை இவற்றில் எங்காவது சிறு மாறுதல் நடக்கும்போது ஜோதிடப் பலன்கள் தவறி விடக்கூடும்.
நமது கைரேகை சாஸ்திரத்தில் சந்திரமேட்டில் சக்கரம், சூலம், வேல் போன்ற அமைப்புகள் இருந்தால், அவர்களுக்கு கைரேகை பலன்கள் கூறமாட்டார்கள். காரணம் அவ்வாறு கூறினால், சொல்லும் வாக்கு பலிதம் ஆகாது.
 
இவர்களது படைப்பு, கடவுளின் நேரடி கண்காணிப்பில் இருப்பதாக கருதப்படும். இவர்களது படைப்பில் வேறு ஏதோ ஒரு கூடுதல் நோக்கம் இருக்கும். அந்த நோக்கம் முடியும் வரை பூமியில் ஜீவிப்பார்கள்.
நவகிரகங்களில் ஐந்து கிரகங்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது ஒரு பாவத்தில் நின்றால், அவர்களுக்கு ஜாதகம் பலிக்காது. ஐந்து அல்லது ஆறு  கிரகங்கள் உச்சம் பெற்றிருந்தாலும் ஜோதிடம் பலிக்காது.
 
ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் நீசம் பெற்று இருந்தால், வாழ்வில் பிச்சையெடுத்துக் கொண்டு, சாலை ஓரங்களில் சாக்கடை ஒரங்களில்  வாழும் நிலை உண்டாகும். இத்தகைய அமைப்பு உள்ளவர்களுக்கும் ஜோதிடம் பலிக்காது.
 
லக்னத்துக்கு பாதகாதிபதியின் நட்சத்திர சாரத்தில் 5 அல்லது 6 கிரகங்கள் என்று இருந்தால் வாழ்வில் வறுமை நிலையே நீடிக்கும்.  இவர்களுக்கும் ஜோதிடம் பலிக்காது.
 
பரிகாரம்:
 
ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் விரதம் இருந்து, சிவனை வழிபட்டால் மட்டுமே இவற்றிலிருந்து விடுபட முடியும். பிரதோஷ வழிபாடு சகல தோஷத்துக்கு வழிபாடாக இருக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :