1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம் !!

அம்பிகை சிவனை வேண்டி தவமிருந்த விரதம் கேதார கௌரி விரதம். இதனை திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டியும், திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் வேண்டியும் விரதம் இருக்கின்றனர். 

கேதார கௌரி விரதத்தினை மன ஒருமைப்பாட்டுடனும், புனித நோக்குடனும் என்ன வரம் வேண்டி அனுஷ்டிக்கிறார்களோ அந்தந்த வரங்களை அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க சிவன் மிக விரைவாகவே கொடுத்து விடுவார் என்பது பலரது அனுபவ உண்மையாகும்.
 
எத்தனை நாள் விரதம்: அம்பிகை தவ நிலையில் இருந்த விரதம் இது, அவர் இறைவனின் உடம்பில் பாதியை அன்னை பெற்ற விரதம் இது. இந்த விரதம் இருப்பவர்கள் 21 முடிச்சுகள் கொண்ட காப்பை அணிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு திதிக்கும் ஒரு முடிச்சு என போடுவார்கள். இப்போது 21 நாட்கள் பலரால் விரதம் இருக்க முடிவதில்லை. 3 நாட்கள், ஏழு நாட்கள், ஏன் ஒரு நாள் கூட சிலர் விரதம் இருந்து பூஜை செய்கின்றனர்.
 
எம்பெருமானே இவ்விரதத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும் என்று சிவபெருமானிடம் அம்பிகை கேட்டுக்கொண்டார். சிவன் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று அவ்வாறே ஆகுக என்று அருள் புரிந்தார். எனவே ஒற்றுமையுடன் வாழ நினைக்கும் தம்பதியர் இந்த விரதம் அனுஷ்டிக்கலாம். 
 
இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமை யொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது பலரது அனுபவ உண்மையாகும்.