1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (07:52 IST)

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – சிம்மம்! | January 2025 Monthly Horoscope Simmam

Simmam
January 2025 Monthly Horoscope : இந்த 2025ம் ஆண்டின் இறுதி மாதமான ஜனவரி மாதம் பல்வேறு வழிகளில் நன்மைகளை தரும் மாதமாக அமைகிறது. இந்த ஆண்டின் இறுதி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் கேது -  சுக  ஸ்தானத்தில் புதன் -  பஞசம  ஸ்தானத்தில் சூர்யன் -  ரண ருண ரோக  ஸ்தானத்தில் சுக்ரன் -  களத்திர  ஸ்தானத்தில் சனி -  அஷ்டம  ஸ்தானத்தில் ராஹூ  - தொழில்  ஸ்தானத்தில் குரு (வ) -  அயன சயன போக  ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்: 

01.01.2025  அன்று  புதன்  சுக  ஸ்தானத்தில்  இருந்து  பஞசம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
14.01.2025   அன்று  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்   ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
18.01.2025 அன்று அயன சயன போக  ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பகவான் லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 28.01.2025 அன்று களத்திர  ஸ்தானத்தில் இருந்து சுக்கிர பகவான் அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள்.

எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது சிறிது தள்ளிப் போகலாம். வேலை மாற்றம் உறுதிபடுத்தப்படுகிறது. வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும். கலைத்துறையினருக்கு பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசியல்துறையினருக்கு கௌரவம் அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு புத்துணர்ச்சியுடன் எதையும் எதிர் கொள்வர். நல்ல உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் இருக்கும்.

மகம்:

இந்த மாதம் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக்கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பூரம்:

இந்த மாதம் எதிலும் கூடுதல் கவனம் தேவை. மனக்கவலை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும். எந்த பிரச்சனைகள் வந்தாலும், எதிர்த்து நின்று சமாளிக்க கூடிய ஆற்றல் வெளிப்படும். வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

உத்திரம்:

இந்த மாதம் உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம்  மனஸ்தாபம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பரிகாரம்: காலபைரவரை வணங்குங்கள். சுபநிகழ்ச்சிகள் அனைத்தும் தடையின்றி நடக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்:      6, 7
அதிர்ஷ்ட தினங்கள்:            14, 15, 16