வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

என்னென்ன கிழமைகளில் கருட தரிசனம் செய்வது நல்லது...!!

பெருமாளின் வாகனமாய் கருடன் இருக்கின்றது. பக்தர்களின் துயரினை போக்க பகவான் விரைந்து வர பேருதவியாய் இருப்பதால் இறைவனுக்கு ஈடாய் கருடனை கருடாழ்வார் என அழைப்பர். இறை தரிசனத்தைப்போலவே கருட தரிசனமும் மிக நல்லது.
அதிகாலை சூரிய உதயத்தின்போது கருடனை தரிசித்தால், நினைத்த காரியம் நடைபெறும். வியாழன் பஞ்சமியில் சுவாதி நட்சத்திரத்தில் கருட பஞ்சாங்கத்தை படிப்பது அமோக பலனை தரும். சுவாதியில் மாலை நேர கருட தரிசனம் மிகவும் விசேஷம்.
 
ஞாயிறு: பிணி விலகும். திங்கள்: குடும்ப நலம் பெருகும். செவ்வாய்: துணிவு பிறக்கும். புதன்: பகைவர் தொல்லை நீங்கும். வியாழன்: நீண்ட  ஆயுள் கிடைக்கும். வெள்ளி: திருமகள் திருவருள் கிட்டும். சனி: முக்தி அடையலாம்.
 
தேவலோகத்தில் இருந்து கருடன் எடுத்து வந்த அமுத கும்பத்தில் ஒட்டிய தேவப்புல்லே பூவுலகில் விழுந்து தர்ப்பை ஆனதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தர்ப்பை பூஜை, யாகங்களில் இடம்பெறும் அந்தஸ்தை பெற்றது.