செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை முழுமையாக நீக்க இதை செய்துபாருங்க....!

எலுமிச்சை பழத்தை கொண்டு கண் திருஷ்டியை கழிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். இதனை தேவகனி என்று கூறுவர். கண் திருஷ்டியை போக்க எலுமிச்சை பழத்தை தேர்ந்தெடுக்கும் போது, அவை தெளிவான பழமாக தேர்தெடுக்க வேண்டும். அதாவது எவ்விதமான புள்ளிகள்  மற்றும் அழுகல் இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும். 
அன்றாடம்வேலை செய்யும் இடம் அல்லது படிக்கும் இடங்களில் உள்ள மேஜையின் மீது, 3 எலுமிச்சை பழத்தை வைத்துக் கொள்வது மிகவும்  நல்லது. அதிலும் ஒரு கண்ணாடி கிண்ணத்தில் 3 எலுமிச்சையை வைத்து, வீட்டில் உள்ள மேஜையில் வைத்தால், உறவுகள் பலப்படும். 
 
வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, ஒரு பச்சை எலுமிச்சையை பாக்கெட் பையில் வைத்துக் கொண்டு சென்று வந்ததும் அந்த எலுமிச்சையை பார்க்கும் போது, அது நன்கு காய்ந்திருந்தால், உங்களை நோக்கி அதிக எதிர்மறை ஆற்றல் வந்துள்ளது என்று அர்த்தமாகும். 
நமது வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை வெளியேற்ற, ஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக அறுத்து, உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைத்து, கட்டிலுக்கு அடியில் வைத்து, மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையைக் கையால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து  போட்டு தூக்கி எறிந்து விட வேண்டும். 
 
இந்த முறைகளை பின்பற்றும் போது, வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் முழுமையாக நீங்கி, வளம்பெறலாம்.