வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

அமாவாசை தினத்தில் முன்னோர் வழிபாடு சிறந்தது ஏன்...?

முதலில் அமாவாசை தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விடவேண்டும். பின்பு வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகள் விலக உப்பு  கலந்த நீரால் வீடு முழுவதையும் கழுவி தூய்மைப்படுத்த வேண்டும். பின்பு வீட்டிலுள்ள பூஜையறையில் காலையிலும், மாலையிலும்   விநாயகர் படத்திற்கு முன்பு தீபம் ஏற்ற வேண்டும்.
அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும், ஜீவன்களும் நம்முடைய முன்னோர்களும்  பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், கடலோரங்களிலும் அதாவது காசி, ராமேஸ்வரம், கயா போன்ற புண்ணிய தலங்களிலும்  தர்ப்பண பூஜையை ஏற்றுக் கொள்கின்றானர் என்பது சாஸ்திரம்.
 
சில சடங்குகளுக்கும், சில வழிபாடுகளுக்கும் அமாவாசை நாள் சிறந்தது. அதில் ஒன்று தான் பித்ரு தர்ப்பணம். முன்னோர்களில் மூன்று  தலைமுறையினரையாவது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின்  அருளாசியால் என்ணற்ற நன்மைகள் ஏற்படும்.
 
காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் அனைவரும் அறிந்ததே. பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காம எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனிம் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில்  வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நம்மை வாழ்த்துவார்கள் என்பது ஐதீகம்.
முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சீரியன். அந்த தேவதைகளே  மறைந்த நம் முன்னோர்ரிடம் பலன்களை சேர்க்கின்றன. அதனாலேயா சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம். அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும்போது, பிதுர்காரகனாகிய சூரியனுக்கு இரு கைகளாலும் நீர் விடுவது மிகுந்த நன்மை தரும். இஹ்டுவரை, பிதுர் காரியங்கள் செய்ய முடியாதவர்கள் இனியாவது இதைப் பின்பற்றுவோம்.
 
அமாவாசை தினத்தில் முன்னோர்களின் பரிபூரண ஆசியும் நமக்கு கிடைக்கும். மேலும் குலதெய்வத்திற்கு பூஜை செய்து படையலிட்டு வழிபட்டு வந்தால் குலதெய்வ சாபம் நீங்கும்.