செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (12:06 IST)

தெய்வீக திருமணங்கள் அதிகம் நிகழ்ந்த நாள் எது தெரியுமா...?

பங்குனி உத்திர நாளில் தான் தெய்வீக திருமணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.


ஸ்ரீராமபிரான்-சீதாதேவி, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்கணன்-ச்ருத கீர்த்தி என ஸ்ரீராம சகோதரர்களின் திருமணம் நடந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

தெய்வீக திருமணங்கள் அதிகம் நிகழ்ந்த பங்குனி உத்திரத்தின் சிறப்புகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

பங்குனி உத்திரத் திருவிழா, இதற்குப் பெயர் கோடை வசந்த விழாவின் நுழைவு விழா என்று தான் அர்த்தம். பங்குனி மாதம் பிறந்து விட்டாலே கோடையும் வசந்தமும் வந்து விட்டது என்று தான் அர்த்தம். கோடை காலத்தின் ஆரம்பமே பங்குனி மாதம் தான். அதனால் தான் அதை வரவேற்கும் விதமாக வசந்த விழா கொண்டாடப்படுகிறது.

வட மாநிலங்களில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் சகோதரத்துவத்தை வலியுறுத்தவும் எப்படி ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதோ, அது போலவே நம் தமிழகத்தில் பங்குனி உத்திரப் பெருவிழாவாகக் கொண்டாடி வருகிறோம்.