தேங்காய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் !!
தேங்காய் தீபத்தை எல்லா தெய்வங்களுக்கும் ஏற்ற மாட்டார்கள். ஒரு சில பிரச்சினைகளை போக்கவே தேங்காய் தீபம் ஏற்றப்படுகின்றது.
இருப்பினும் இத்தீபம் ஏற்றுவதனால் பல நன்மைகள் உண்டு. அந்தவகையில் தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
பண ரீதியான வில்லங்கமான விஷயங்களில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள் வீட்டின் பூஜை அறையில் சுக்கிர ஹோரையில் திங்கள் கிழமையில் தேங்காய் தீபத்தை ஏற்றி வழிபடுவார்கள்.
தேங்காய் தீபம் ஏற்றும் பொழுது தேங்காய் உள்ளே நெய் ஊற்ற வேண்டும். தேங்காய் தீபத்தில் நெய் தவிர வேறு எந்த எண்ணெய்களையும் பயன்படுத்துவது வேண்டாம். திருமண தடை நீங்கவும், தொழில் வளம் சிறக்கவும், நல்ல வரன் அமையவும், வேண்டுதல்கள் விரைவாகவும் பலிக்கும்.
தேங்காய் தீபம் என்பது பெண் தெய்வங்களுக்கு செய்யப்படும் ஒரு பரிகாரம் ஆகும். பண ரீதியான தகராறுகள், பிரச்சனைகள் நீங்க தேங்காய் தீபம் போடுவது வழக்கம். மேலும் வேலை இல்லாதவர்களுக்கு மற்றும் குழந்தை இல்லாதவர்களுக்கு நன்மைகள் நடக்க தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.
அம்பாளின் சந்நிதானத்தில் தேங்காயில் தீபம் ஏற்றி வழிபாடுகள் செய்ய வெற்றி உண்டாகும். ஆனால் இதை வீட்டில் செய்யக்கூடாது.