1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஒரு மணி நேரம் மௌன விரதம் இருப்பதால் உண்டாகும் பலன்கள் !!

ஒரு மணி நேரம் மௌன விரதம் இருப்பதால், ஒரு மணி நேரம் நீங்கள் இறைவனுக்கு சம்மதமாக வாழ்ந்ததாகிறது. ஒரு மணி நேரம் ஹரிச்சந்திரன் போல் உண்மையை பேசியதாகிறது.

ஒரு மணி நேரம் பூஜை செய்ததாகிறது. ஒரு மணி நேரம் உங்கள் பாவத்தை போக்கி கொள்ள பிராயசித்தம் செய்ததாகிறது.
 
ஒரு மணி நேரம் இறைவனை நோக்கி சில படிகள் முன்னேறியதாகிறது. ஒரு மணி நேரம் வேதம் ஓதுவதாகிறது.
 
ஒரு மணி நேரம் பெரியோர்கள் சொல் பேச்சு கேட்டதாகிறது. ஒரு மணி நேரம் நீங்கள் பக்தராகிறீர்கள்.
 
ஒரு மணி நேரம் நீங்கள் மஹான்களால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். ஒரு மணி நேரம் உங்கள் புலன்களை ஜெயித்தவர்கள் ஆகிறீர்கள். ஒரு மணி நேரம் தியானம் செய்தவர் ஆகிறீர்கள். ஒரு மணி நேரம் சமாதியில் உள்ளவர் ஆகிறீர்கள்.