ஆனி தமிழ் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மேஷம்!
கிரகநிலை:
ராசி ஸ்தானத்தில் செவ்வாய் - தனவாக்கு ஸ்தானத்தில் குரு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூர், புதன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
கிரகமாற்றம்:
ஆனி மாதம் 12ம் தேதி (26.06.2024) புதன்கிழமை அன்று தைரிய ஸ்தானத்தில் இருந்து புத பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்
ஆனி மாதம் 23ம் தேதி (07.07.2024) ஞாயிற்றுக்கிழமை அன்று தைரிய ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்
ஆனி மாதம் 27ம் தேதி (11.07.2024) வியாழக்கிழமை அன்று ராசி ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பகவான் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்
ஆனி மாதம் 32ம் தேதி (16.07.2024) செவ்வாய்கிழமை அன்று தைரிய ஸ்தானத்தில் இருந்து சூர்ய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்
வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும் மேஷ ராசியினரே இந்த மாதம் எதைப் பற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பணவரத்து இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை. இல்லையெனில் வீணான அவச்சொல் வாங்க நேரிடும்.
தொழில் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது அவை போய் சேர்ந்தனவா என்று கண்காணிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம்.
குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளிடம் நிதானமாக பேசுவது நல்லது.
பெண்களுக்கு எதைப் பற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். வரவும் செலவும் சரியாக இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை நன்கு படிப்பது நல்லது.
அஸ்வினி:
ஒரு குறிக்கோளை மனதில் வைத்து துணிவுடன் செயலாற்றுவீர்கள். உங்கள் பேச்சு திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக நடந்துமுடியும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் அவர்களால் உதவி ஆகியவையும் கிடைக்கலாம். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உதவுவதற்காக யாராவது ஒருவர் துணை நிற்பார். பகைகள் விலகும்.
பரணி:
தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராது. போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்கள் மீதான மதிப்பு உயரும்.சக தொழிலாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.
கார்த்திகை 1ம் பாதம்:
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், எதிர்ப்புகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டாகும். பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து கந்தர்சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13, 14
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி