ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பூமாதேவியின் அம்சமாக போற்றப்படும் ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் !!

ஆண்டாள் நாச்சியார் பூமாதேவியின் அம்சமாக போற்றப்படுகிறார். பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிபிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள்.

அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய மலர்மாலைய தானே சூடிக் கொண்டு அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற பெயரும் பெற்றார்.
 
ஆடிப்பூரம் நாளில்தான் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம். 
 
இந்த நாளில் விரதம் இருந்து ஆண்டாளையும் பெருமாளையும் வேண்டிக்கொண்டால் மனம் போல திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதே போல அம்மன்கோவில்களில் நடைபெறும் வளைகாப்புக்காக வளையல் வாங்கிக் கொடுத்தால் நம் வீட்டிலும் விரைவில் வளைகாப்பு விழா நடைபெறும் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.